16எம்பி செல்பீ கேமராவுடன் மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 அறிமுகம்.!
மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது புதிய மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் தற்போது ரூ.11,999-க்கு விற்பனைக்கு செய்யப்படுகிறது, மேலும் நாடு முழுவதும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பொறுத்தவரை 16மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது, அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்ப வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

ஆண்ட்ராய்டு:
மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.அதன்பின் குறைந்த வெளிச்சம் இருந்தாலும் துள்ளியமாக வீடியோ எடுக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications