Home
Mobile

நாளை 3 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்!

By Karthikeyan
நாளை 3 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்!

இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு நாளை ஒரு முக்கியமான நாள் என்று சொல்லலாம். ஏனெனில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நிறைய நம்பிக்கையுடன் தனது 3 புதிய ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் நாளைக் களமிறக்குகிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போன்களுக்கு மைக்ரோமேக்ஸ் எ84, எ90 மற்றும் எ100 என்ற பெயர்களைச் சூட்டி மகிழ்கிறது மைக்ரோமேக்ஸ். இந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி ஏராளமான செய்திகள் இணைய தளங்களில் ஏற்கனவே வந்துவிட்டன.

அதன்படி சூப்பர்போன் எலைட் எ84 என்று அழைக்கப்படுகின்ற மைக்ரோமேக்ஸ் எ84 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.6 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன், 3.97 இன்ச் அளவில் ஒரு ஐபிஎஸ் டபுள்யுவிஜிஎ டிஸ்ப்ளே, 5எம்பி பின்பக்க கேமரா, 0.3எம்பி முகப்பு கேமரா, வைபை, 3ஜி, யுஎஸ்பி, ஆயிஷா வாய்ஸ் ரெக்கக்னிசன், ஜிபிஎஸ் மற்றும் எ-ஜிபிஎஸ் போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த போன் ரூ.9,999க்கு விற்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக மைக்ரோமேக்ஸ் எ100 ஒரு உயர்தர ஸ்மார்ட்போன் டேப்லெட் ஆகும். இந்த போனைப் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வரவில்லை. ஆனால் ஹோம்சாப் 18 அளிக்கும் தகவலின்படி இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் டூவல் சிம் வசதி கொண்டது. அதோடு இந்த போன் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, 5எம்பி கேமரா, 3ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேசன்கள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்த போனும் ரூ.9,999க்கு விற்கப்படுகிறது.

இறுதியாக மைக்ரோமேக்ஸ் எ90 ஸ்மார்ட்போன் ரூ.12,999க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும். மேலும் இந்த போன் 4.3 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பளே, டூவல் சிம் வசதி, எல்இடி ப்ளாசுடன் கூடிய 8எம்பி கேமரா மற்றும் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் ஆகியவற்றுடன் களமிறங்குகிறது.

இந்த 3 ஸ்மார்ட்போன்களும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X