கவர்ச்சிகரமான விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்!

கவர்ச்சிகரமான மொபைலை மட்டும் அல்ல கவர்ச்சிகரமான விலையிலும் சிறந்த மொபைல்களை கொடுப்பதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பிரபலமாக திகழ்கிறது. அதற்கு தகுந்த வகையில் அந்த நிறுவனம் கியூ-22 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 2 இஞ்ச் திரை உள்ளதால் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தின் மூலம் டிஎப்டி தொழில் நுட்பத்தினை வழங்கும்.
இதன் தோற்றத்தை பார்த்தால் இது மலிவு விலை கொண்ட மொபைல் என்றே சொல்லமுடியாது. ஏனெனில் இது கியூவர்டி கீப்பேடை கொண்டுள்ளது. நிச்சயம் இந்த மொபைல் வாடிக்கையாளர்களை முதலாம் பார்வையிலேயே கவர்ந்துவிடும் என்று கூறலாம்.
எஸ்விஜிஏ சூம் வசதியை வழங்கும் 0.3 மெகா பிக்ஸல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக விலை கொண்ட மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வெளி வந்தாலும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களின் தேவை அதிகமாக உள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த மொபைலை இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் தொழில் நுட்பத்தினை இதில் கொடுத்துள்ளது.
ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியை கொடுக்கும் இந்த மொபைல் 1,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொண்டதாக உள்ளது. இதனால் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும். இந்த அடிப்படை வசதி கொண்ட கியூ-22 மொபைலை ரூ.2,000 விலையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications