மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
|
மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

இரண்டு விதமான எலக்ட்ரானிக் சாதனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தொழில் நுட்ப சாதனங்களின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன்ததின் 2 சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீட்டினை பற்றி இங்கே பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-90 பிக்ஸல் மற்றும் கார்பன் ஏ-18 ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே டியூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஆனால் இதன் திரை தொழில் நுட்பம் வேறுபடுகிறது. ஏ-90 ஸ்மார்ட்போனில் அமோலெட் திரையினையும், ஏ-18 ஸ்மார்ட்போனில் ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினையும் பெறாலம்.

சூப்பர்போன் ஏ-90 பிக்ஸல் போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேரமாவினை பெறலாம். ஏ-18 கார்பன் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை பயன்படுத்தலாம்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில் 1 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் பெற முடியும்.

பேட்டரியில் சில வேறுபாடுகளை இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் காணலாம். சூப்பர்போன் ஏ-90 ஸ்மார்ட்போனின் 1,600 எம்ஏஎச் பேட்டரியில் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 174 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். கார்பன் ஏ-18 ஸ்மார்ட்போனின் 1,500 பேட்டரியின் மூலம் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை பயன்படுத்தலாம்.

மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் பிக்ஸல் ஏ-90 ஸ்மார்ட்போன் ரூ. 12,999 விலை கொண்டதாகவும், கார்பன் ஏ-18 ஸ்மார்ட்போன் ரூ. 9,790 விலை கொண்டதாகவும் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X