சீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே.! மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

|

இந்திய சந்தையில் சீன நிறுனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது என்றே கூறலாம், அதாவது மாதத்தில் அனைத்து வாரங்களிலும் எதாவது ஒரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சீன நிறுவனங்கள். அதாவது பட்ஜெட் விலை முதல் சற்று உயர்வான விலை வரை இந்த சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

செக்மென்டைக் குறிவைத்து

இந்நிலையில் பட்ஜெட் செக்மென்டைக் குறிவைத்து 3புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் நிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லையில் மேக்ரோமேகஸ்

இந்த மைக்ரோமேகஸ் நிறுவனம் கடைசியாக ரூ.8,199 என்ற விலையில் மேக்ரோமேகஸ் ஐஒன் நோட் என்ற மாடலை வெளியிட்டது,

அதன்பின்னர் எந்தவொரு புதிய ஸ்மார்ட்போன் மாடலும் வெளியிடப்படாத நிலையில் தற்போது மேலும் 3புதிய மாடல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா? வாங்க பார்ப்போம்.!.?

360வலைதளம் அளித்த

மேலும் கேட்ஜெட்ஸ் 360வலைதளம் அளித்த தகவலின் அடிப்படையில் மைக்ரோமேக்ஸின் இந்தப் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என்று தெரிகிறது. பின்பு இந்த சாதனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு ஜுலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மைக்ரேமேக்ஸ் தனது

குறிப்பாக இதுபோன்ற அறிவிப்புகள் வெளிவந்த நிலையில்,மைக்ரோமேக்ஸ் தனது வாடிக்கையாளர்களிடமும் இதுகுறித்த கருத்துகளைகேட்டு வருகிறது.ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் சீனாவுக்கு எதிரான மனநிலையில் இருக்குபோது இது பெரிய மாற்றத்திற்காக நாங்கள் கடினமான உழைத்துவருகிறோம். காத்திருங்கள்" என்று மைக்ரோமேக்ஸ் ட்வீட் செய்துள்ளது. தனது இன்னொரு ட்வீட்டில் நவீன தோற்றத்திலும், புதிய அம்சங்களுடனும் எங்கள் அடுத்த வெளியீடுகள் இருக்கும்.

அறிக்கையின்படி உலக

இந்த மைக்ரோமேக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு அறிக்கையின்படி உலக அளவில் பத்தாவது இடத்தையும் பிடித்திருந்தது. ஆனால் சியோமி உள்ளிட்ட சில நிறுவனங்களின் வருகையால் தங்களுடைய மார்க்கெட்டை இழந்தது மைக்ரோமேக்ஸ்.

இழந்த தன் நிலையை மீண்டும் பெற முயற்சிக்கிறது மைக்ரேமேக்ஸ் நிறுவனம்.

பின்பு இன்பினிட்டி என்11, இன்பினிட்டி என்12 போன் மொபைல் மூலம் இழந்த தன் நிலையை மீண்டும் பெற முயற்சிக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மீண்டும் புதிய அம்சங்களுடன் சற்று குறைவான விலையில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax Launching 3 New Smartphones in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X