Home
Mobile

சோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்!

By Super
சோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்!

எக்ஸ்-259 சோலார் என்ற பட்ஜெட் விலை கொண்ட மொபைல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும்.

இதில் 2.4 இஞ்ச் திரை வசதியினை பெற முடியும். இதன் கியூவிஜிஏ தொழில் நுட்ப திரையின் மூலம் தெளிவான தகவல்களை பெறலாம். சிறிய திரையாக இருப்பினும் இதில் திரை 240 X 320 துல்லியத்தினையும் பெறலாம்.

டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் இன்னும் ஒரு கூடுதல் வசதியும் உள்ளது.

இந்த மொபைலில் உள்ள பேனல் சோலார் சார்ஜிங் வசதி கொண்டது.

சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைல் கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இப்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைலின் பேனல் மிக சிறப்பான வசதியை வழங்கும்.

3 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால், 1.5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கும். மேலும் இந்த மொபைலில் விஜிஏ கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும். இத்தனை வசதி கொண்ட இந்த மொபைலை ரூ. 2,499 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X