குறைந்த விலையில் மைக்ரோமேக்ஸ் மொபைல்போன்!

By Super
|
குறைந்த விலையில் மைக்ரோமேக்ஸ் மொபைல்போன்!

மூன்று சிம் கார்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் புதிய கியூ-36 என்ற மொபைல்போன் வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

இந்த மொபைல்போன் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும், இதன் வடிவமைப்பு அதிக விலை கொண்ட மொபைல்போன் போல காட்சி அளிக்கும் என்று தாராளமாக கூறலாம். ஏனெனில் இதில் கியூவர்டி கீப்பேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பீரமான தோற்றத்தினை வழங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய

மொபைல்போன்.

இந்த மொபைல்போன் அகன்ற திரையை எதிர்பார்க்க முடியாது. இதில் 2.3 இஞ்ச் திரை வசதி இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமான துல்லியத்தினை வழங்கவில்லை என்றாலும், மைக்ரோமேக்ஸ் கியூ-36 மொபைல்போன் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

இதன் விஜிஏ முகப்பு கேமரா சிறப்பாக 640 X 480 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை கொடுக்கும். ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல்போனில் 8 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

ஜிபிஆர்எஸ் மற்றும் யூஎஸ்பி போர்ட் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் இந்த மொபைல்போனில் 1,450 எம்ஏஎச் பேட்டரியின் மூலம், நீண்ட ஆற்றலை வழங்க நீடித்து உழைக்கும். குறைந்த விலை கொண்ட இந்த மொபைல்போனை எளிதாக வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை வழங்கும் மைக்ரோமேக்ஸின் கியூ-36 மொபைல்போன் ரூ. 4,299 விலையினை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X