Home
Mobile

புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுடன் வரும் மைக்ரோமேக்ஸ்!

By Super
புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுடன் வரும் மைக்ரோமேக்ஸ்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் மோகம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. இதனால் புதிய ஸ்மார்ட்போன் வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பான வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை வழங்குகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

சூப்பர்ஃபோன் வரிசையில் புதிய ஏ-84 எலைட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டது.

இதன் மூலம் ஆன்ட்ராய்டில் உள்ள புதிய அப்ளிக்கேஷன்களை மனம் விரும்பிய வண்ணம் எளிதாக டவுன்லோட் செய்து அதன் வசதியினை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கும். இதில் 4 இஞ்ச் ஐபிஎஸ் தொழில் நுட்பம் கொண்ட திரையினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

இந்த திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸர் வசதியினையும் வழங்கும்.

5 மெகா பிக்ஸல் கேமராவினால் இதில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பயன்படுத்தலாம். இதில் செகன்டரி கேமராவாக 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் 1,630 எம்ஏஎச் பேட்டரி உயர்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்த, சிறப்பாக நீடித்து உழைக்கும். இந்த மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-84

எலைட் ஸ்மார்ட்போன் ரூ. 9,999விலை கொண்டது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X