Home
Mobile

சிர்கோனியா டைமண்ட் பதித்த பட்ஜெட் மொபைல்!

By Super
சிர்கோனியா டைமண்ட் பதித்த பட்ஜெட் மொபைல்!

சிர்கோனியா கற்கள் பதித்த மொபைலை குறைந்த விலைக்கு அறிமுகம் செய்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

எக்ஸ்-44 பிலிங் என்ற புதிய மொபைலில் ஸ்வரோவ்ஸ்கி சிர்கான் என்ற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் சாதாரண வசதிகள் கொண்டது தான். ஆனால் இதில் சிர்கானியா கற்கள் பதித்துள்ளது என்பது தான் எக்ஸ்-44 பிலிங் என்ற இந்த மொபைல் பற்றிய புதிய செய்தி.

மற்ற படி உள்ளே கொடுக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப வசதிகள் அனைத்தும், மற்ற மொபைல்களில் உள்ளவை தான். இந்த டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஆடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர் போன்ற பொழுதுபோக்கு வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது.

சிர்கோனியா என்ற இந்த கற்கள் வைர கற்களின் வரிசையில் வந்தாலும், வைரத்தினை போன்று விலை அதிகம் கொண்டதல்ல. சிர்கோனியா கற்கள் பதித்த இந்த மொபைல் 2.0 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதில் உள்ள 512 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியை 8 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

ஆனால் இந்த மொபைல் சிறப்பான பேட்டரி பேக்கப் வசதியினை வழங்கும் என்று கூறலாம். ஏனெனில் இதில் 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 248 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை வழங்கும். பிலிங் வரிசையில் புதிய மொபைலான இந்த எக்ஸ்-44 மொபைல் ரூ. 3,000 விலையை கொண்டது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X