புதிய ஏ-90 ஸ்மார்ட்போனை வெளியிடும் மைக்ரோமேக்ஸ்!

By Super
|

புதிய ஏ-90 ஸ்மார்ட்போனை வெளியிடும் மைக்ரோமேக்ஸ்!
நேற்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக வெளியான செய்தியினை பார்த்தோம். அதிலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 3 ஸ்மார்ட்போன்களை வழங்குவதாகவும், அதில் ஏ-90 என்ற ஸ்மார்ட்போனை நாளை வெளியிடுவதாகவும், நேற்று தகவல்கள் வெளியானது. இதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ-90 ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் பற்றி தொழில் நுட்ப தகவல்களை பார்க்கலாம். தகவல்களை தெளிவாக திரையில் பார்க்க 4.3 இஞ்ச் அகன்ற திரையில் சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தனை வழங்கும். இயங்குதளம் சிறப்பாக செயல்பட உதவும் இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரில் டியூவல் சிம் வசதியினையும் பெறலாம்.

8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். இதில் உள்ள 1,600 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 174 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 5 மணி நேரம் டாக் டைம் வசதியினை பெறலாம்.

மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பு என்வென்றால், இதில் ப்ரீலோடு செய்யப்பட்ட ஆயிஷா எஸ் வாய்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி இன்டர் வசதியை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் ரூ. 12,990 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X