Home
Mobile

கைக்கு அடக்கமான விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

By Super

கைக்கு அடக்கமான விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!
கவர்ச்சிகரமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளி வந்தாலும், டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

புதிய டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்க் என்ற இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டுகளுக்கு சப்போர்ட் செய்யும்.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வசதியினை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்ங்க் குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு ஸமார்ட்போனாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அடங்கும்.

பிராசஸர் சிறப்பாக இயங்குமா என்பதை அனைத்து வாடிக்கையாளர்களும் பார்க்கின்றனர். இந்த ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்ங்க் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளத்தினை கொண்டதோடு, 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரினையும் கொடுக்கும்.

ஆனால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதற்காக இதில், அதிக மெகா பிக்ஸல் கொண்ட கேமராவினையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சில ஸ்மார்ட்போன்களில் மெயின் கேமரா குறைந்த பிக்ஸல் கொண்டதாக இருந்தால், முகப்பு கேமரா இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் 2 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், முகப்பு கேமரா ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனால் இதன் மெயில் கேமரா குறைந்த பிக்ஸலை கொண்டிருந்தாலும், சிறந்த துல்லியத்தினை வழங்கும் என்று கருதலாம்.

குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் என்ற எண்ணத்தை நிச்சயம் இந்த ஸ்மார்ட்போனின் திரை மாற்றிவிடும். ஏனெனில் இதில் 3.14 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சமாக எப்எம் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன், 4 மணி நேரம் டாக் டைம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் 1,200 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினையும் கொடுக்கும். மேலும் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.

கியூவிஜிஏ திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 120 கிராம் இலகு எடை கொண்டது. கறு்பபு மற்றும் வெள்ளை நிறத்தில் பிரதிபலிக்கும் இந்த ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்ங்க் ஸ்மார்ட்போனில் உள்ள 140 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை, 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 4,500 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X