மைக்ரோமேக்ஸ் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

Posted By: Karthikeyan
மைக்ரோமேக்ஸ் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் தீவாளி கொண்டாட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவாளியை முன்னிட்டு மொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்களை இந்திய மொபைல் சந்தையில் தீவிரமாக களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் எ110 சூப்பர்போன் கேன்வாஸ் 2 மற்றும் எ90எஸ் சூப்பர்போன் பிக்சல் ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருகின்றன.

மைக்ரோமேக்ஸ் எ110 கேன்வாஸ் 2 போனை எடுத்துக் கொண்டால் இந்த போன் 5 இன்ச் அளவில் ஒரு எப்டபுள்யுவிஜிஎ கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0.3 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸருடன் வருகிறது. அதனால் இந்த போன் மிக அபாரமான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். மேலும் இந்த போனில் கூகுள் ப்ளேயில் உள்ள புதிய அப்ளிகேசன்களையும் இயக்க முடியும்.

இந்த போன் ஒரு 8எம்பி சிஎம்ஒஎஸ் கேமராவை பின்புறத்தில் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஒரு டூவல் எல்இடி ப்ளாஷ் மற்றும் ஏராளமான கேமரா செட்டிங்கும் உள்ளது. அதனால் இந்த கேமராவில் சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த போனில் 0.3 எம்பி முகப்புக் கேமராவும் உண்டு. இதன் மூலம் வீடியோ உரையாடலையும் நடத்த முடியும். இதன் 4ஜிபி சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் 3ஜி, ஜிபிஎஸ், வைபை மற்றும் ப்ளூடூத் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது. இந்த போனை ரூ.9,990க்கு வாங்கலாம்.

அடுத்ததாக எ90எஸ் சூப்பர்போன் பிக்சலை எடுத்துக் கொண்டால் இந்த போன் டூவல் சிம் வசதியுடன் வருகிறது. 4.3 இன்ச் அளவில் அமோலெட் 262கே ட்ரூ கலர் டிஸ்ப்ளையைக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸரையும் கொண்டிருப்பதால் மிக சூப்பரான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

இந்த போனும் ஒரு 8எம்பி சிஎம்ஒஎஸ் கேமராவைப் பின்புறத்தில் கொண்டுள்ளது. இந்த கேமராவில் எல்இடி ப்ளாஷ், 4எக்ஸ் சூம் மற்றும் நைட் மோட் வசதிகள் உண்டு. அதனால் இந்த கேமராவில் இரவு நேரத்திலும் மிகத் தெளிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் இந்த போனில் 0.3 எம்பி முகப்புக் கேமராவும் உண்டு. இதன் மூலம் சூப்பரான வீடியோ உரையாடலை நடத்த முடியும். இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது. மேலும் இந்த போனை ரூ.12,990க்கு வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்