மலிவு விலையில் ஜியோ வசதி கொண்ட 4ஜி போன் அறிமுகம்!!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்திய பயனர்களைக் கவரும் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கம் போலக் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் புதிய மைக்ரோமேக்ஸ் கருவியில் ரிலையன்ஸ் ஜியோ வசதி வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சேவையினைப் பயன்படுத்தவே புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு புதிய மைக்ரோமேக்ஸ் கருவி சிறப்பான தேர்வாக இருக்கும். இங்கு மைக்ரோமேக்ஸ் புதுவரவு கருவி குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 4ஜி எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய கருவியில் 4ஜி வோல்ட்இ (VoLTE) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 4ஜி கருவியில் 5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்தக் கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் கொண்ட கருவியில் வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மெட்டல் வடிவமைப்பு

மெட்டல் வடிவமைப்பு

கருவியின் பின்புறம் மெட்டல் பேக் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 4ஜி கருவியின் விலை ரூ.4,999/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவி ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் இந்த விற்பனைக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டன. ஃபிளாஷ் விற்பனை நவம்பர் 10 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்குத் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Micromax launched Canvas Spark 4G with Jio support
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot