ரூ. 5,290 விலையில் ஆன்டிராய்டு கிட்காட் ஓஎஸ் கொண்ட மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏட்4500 வெளியானது
போல்ட் ஏட்4500 ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகிறது, டூயல் சிம் வசதி, 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம். கேமராவை பொருத்த வரை 5 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 0.3 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியாக 4 ஜிபி, வைபை, ப்ளூடூத் வசசதிகள் இருப்பதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ஈபே இணையதளத்தில் ரூ.5,290 க்கு கிடைக்கின்றது. இந்நிறுவனம் சமீபத்தில் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்கும் போல்ட் ஏ065 ஸ்மார்ட்போனை வெளியிட்டது, இதில் 4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளேவும் இருக்கின்றது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் மீடியாடெக் எம்டி6571 பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் உள்ளது. மேலும் 2 மெகாபிக்சல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ப்ரைமரி கேமராவும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது. மெமரியை பொருத்த வரை 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும்கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications