ரூ.1,999/-க்கு 4ஜி மற்றும் ரூ,2,999/-க்கு 4ஜி ஆண்ட்ராய்டு - மைக்ரோமேக்ஸ் அதிரடி.!
முகேஷ் அம்பானியின் வெளியாகாத ஜியோ 4ஜி போன்களுக்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மிகவும் மலிவான 4ஜி தொலைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.!
முகேஷ் அம்பானியின் தலைமையின்கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் மலிவான அதாவது ரூ.999/-க்கு அதன் 4ஜி அம்சம் கொண்ட கருவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணமிருக்க அது சார்ந்த எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த தருணத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியின் திட்டத்திற்கு போட்டியாக இந்தியாவில் விரைவில் அதன் இரண்டு புதிய மற்றும் மிகவும் மலிவான 4ஜி தொலைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

பாரத் 1 மற்றும் பாரத் 2
இந்த தொலைபேசிகள் பாரத் 1 மற்றும் பாரத் 2 என்று பெயரிடப்பட்டுள்ளன. பாரத் 1 கருவியானது ஒரு 4ஜி அம்சம் கொண்ட கருவியாகவும் மற்றும் பாரத் 2 கருவியானது ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும் உடன் 4ஜி ஆதரவும் கொண்டிருக்கும்.

கூகுள் மூலம் சான்று
இந்த இரண்டு கருவிகளில் பாரத் 2 கருவியானது கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒரு நன்கு அறியப்பட்ட பிராண்ட் ஆக திகழும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த 4ஜி ஆதரவு கொண்ட கருவி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மத்தியில் மிகவும் மலிவான ஒரு கருவியாக திகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஏப்ரல்
இந்த கருவிகள் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிக பிரீமியம் மற்றும் உயர் இறுதியில் தொலைபேசிகளுடன் சேர்த்து மார்ச் அல்லது ஏப்ரல் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

இரட்டை கேமரா அமைப்பு
அதை உறுதி செய்யும் நோக்கத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரத்தியேகமாக ஒரு உலோக உடல் மற்றும் சாத்தியமான ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்ட மைக்ரோமேக்ஸ் உயர் இறுதி ஆண்ட்ராய்டு தொலைபேசி சார்ந்த அறிக்கையொன்றும் வெளியாகிவுள்ளது.

பாரத் 1
இதற்கிடையில் பாரத் 1 ஆனது பாரத் 2 அறிமுகத்திற்கு பிறகு ஒரு சில வாரங்களில் தொடங்கப்படலாம். ஜியோவின் மலிவான 4ஜி போன் வெளியாகும் வரும் பாரத் 1 கருவிதான் எந்தவொரு 4ஜி செயல்படுத்தப்பட்ட கருவியை விடவும் மிக மலிவான ஒரு கருவியாக திகழும்.

மலிவான
இதுபோன்ற மலிவான அக்கருவிகள் தாமதம் என்றாலும், ஜியோ 4ஜி நெட்வொர்க் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் நுழைவு ஒரு பெரிய கட்டண போருக்கு வித்திட்டது. வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் மலிவான கட்டண விலையில் திட்டங்களை வழங்க நேரிட இப்போது மலிவான 4ஜி போன்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க
ரூ.999/-க்கான ஜியோ 4ஜி போன் புகைப்படம் லீக் ஆனது.!


Click it and Unblock the Notifications








