வெறும் 1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்! அசத்தும் மைக்ரோமேக்ஸ் இந்தியா.!

ஜியோநிறுவனம் இந்தியாவில் ஜியோ போன்களை அறிமுகப்படுத்தும் போது, ஜியோ போன் பயனர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் போன் என அந்நிறுவனம் அழைத்தது.

|

கடந்த ஆண்டு புதிய ஸ்மார்ட்போன் ப்ராண்ட் ஒன்று ப்ரீடம்251என்ற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட்போனை ரூ251 விலைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. தற்போது பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு பிராண்டான மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் 1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் தருவதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளது.

வெறும் 1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்! அசத்தும் மைக்ரோமேக்ஸ் இந்தியா.!

1ரூபாய்க்கு ஸ்மார்ட்போனா....?
மைக்ரோமேக்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில், அந்நிறுவனம் மிக மிக குறைந்நவிலையில் 1ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்கு அந்நிறுவனம் ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கப்போவதாக கூறிவிடலாம். அந்நிறுவனம் ஜூலை 5ம் தேதி அந்ந டீசரை பகிர்ந்துள்ளது.

என்ன தான் சொல்லுது டீசர்!

என்ன தான் சொல்லுது டீசர்!

"ஹலோ... சென்னை.. பெரிய செய்தி!


நாங்க வெறும் 1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்களை அறிவிக்கப்போகிறோம்! நீங்க ரெடியா?" என்கிறது அந்த டீசர்.

அந்த டீசரின் அடிப்படையில் பார்த்தால், வரும் வாரங்களில் அந்நிறுவனம் சென்னையில் ரூ1 விலை (எக்பெக்டிவ் ப்ரைஸ் டேக்) நிர்ணயிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்பெக்டிவ் ப்ரைஸ் டேக் என்றால் என்ன?

எக்பெக்டிவ் ப்ரைஸ் டேக் என்றால் என்ன?

ஜியோநிறுவனம் இந்தியாவில் ஜியோ போன்களை அறிமுகப்படுத்தும் போது, ஜியோ போன் பயனர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் போன் என அந்நிறுவனம் அழைத்தது. எனினும் , அந்த போனை வாங்கும் நேரத்தில் வாங்குபவர் ரூ1500 ஐ பாதுகாப்பு வைப்புநிதியாக செலுத்த வேண்டும். இந்த தொகையானது நிறுவனத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடித்து, மூன்று ஆண்டுகள் கழித்து அந்த போனை நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ரூ1500 அப்படியே திருப்பி அளிக்கப்படும்.

ஜியோ போனை அந்நிறுவனம் இலவச போன் என்று அழைத்தாலும், பயனர்கள் ரூ1500செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் அந்நிறுவனம் குறிப்பிடும் குறைந்தபட்ச தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே பாதுகாப்பு வைப்புநிதியை திரும்ப பெற தகுதிபெற முடியும்.

1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்

1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்

அது போல மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் படி, அந்நிறுவனம் '1ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்' என்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பயனர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை நிரந்திர வைப்புநிதியாக செலுத்த வேண்டும். அதேநேரம் அந்த ஸ்மார்ட்போன் ஏதேனும் ஒரு தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்கள் சலுகையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

காத்திருப்போம்

காத்திருப்போம்

மற்றொரு வாய்ப்பாக, உண்மையிலேயே 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்கள் (Limited Stock) மட்டும் அந்தவிலையில் கிடைக்கும் வகையில் செய்து ஊடகங்கள், சமூகவலைதளங்கள் மற்றும் நுகர்வோர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கலாம். இதே சஸ்பென்ஸ் உடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து '1 ரூபாய் ஸ்மார்ட்போன்' பற்றி அடுத்த அறிவிப்பு வரும்வரை காத்திருப்போம்!

Best Mobiles in India

English summary
Micromax India to launch a smartphone for just Rs 1: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X