புதிய in ஸ்மார்ட்போன்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.. உடனே முன்பதிவு செய்திட வேண்டியது தான்..

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் தனது புதிய 'இன்' பிராண்டிங்கை அறிமுகம் செய்தது. புதிய in பிராண்டின் கீழ் நிறுவனம் இன் 1பி மற்றும் இன் நோட்1 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

முன்பதிவு ஆரம்பம்

முன்பதிவு ஆரம்பம்

மைக்ரோமேக்சின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் நவம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிமுக நிகழ்ச்சியின் போது அறிவித்திருந்தது. அதன்படி, தற்பொழுது இந்த இரண்டு புதிய மாடல்களும் முன்பதிவிற்கு இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மாடலில் 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் உடன் 4 ஜிபி ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருகிறது. அதேபோல், புதிய மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன் 6.52' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொண்டு இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

வங்கியில் சம்பள கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 1 முதல் புதிய திட்டம்..வங்கியில் சம்பள கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 1 முதல் புதிய திட்டம்..

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

  • 6.67' இன்ச் முழு எஃப்.எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10
  • 1000MHz ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு கொண்ட 4 ஜிபி LPPDDR4x ரேம்
  • 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • எஸ்.டி கார்டு ஸ்லாட் வசதி
  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
  • 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
  • 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா
  • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
  • 16 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
  • சென்சார்
    • எப்எம் ரேடியோ
    • கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    • பின்புற கைரேகை சென்சார்
    • டூயல் 4ஜி வோல்ட்இ
    • வைபை
    • ப்ளூடூத் 5
    • யுஎஸ்பி டைப் சி
    • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    • 18W பாஸ்ட் சார்ஜிங்
    • 5000 எம்ஏஎச் பேட்டரி
    • மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

      மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

      • 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
      • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
      • 2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
      • 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார்
      • 8 எம்.பி கேமரா
      • 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
      • 5,000 எம்ஏஎச் பேட்டரி
      • விலை

        விலை

        மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ரூ. 10,999 துவங்கி ரூ.12,499 வரை இரண்டு வேரியண்ட் மாடலாக கிடைக்கிறது. அதேபோல், இன் 1பி மாடல் ரூ. 6,999 என்ற துவக்க விலையில் துவங்கி ரூ.7,999 என்ற விலை வரை இரண்டு வேரியண்ட் மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய மாடல்களும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Micromax In Smartphones Pre-Order Begins From Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X