Home
Mobile

30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி கேமராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், 48எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,490-ஆக உள்ளது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 30-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சஙகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

இந்த மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிக்கு இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும். குறிப்பாக இந்த சிப்செட் மிகவும் வேகமானது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இது தவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ய ஸ்மார்ட்போனில் 5

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்ஃஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம்
என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Micromax In Note 2 Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X