4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு

|

இந்தியாவில் பிளிப்கார்ட் விற்பனையில் மைக்ரோமேஸ் இன் நோட் 1, 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு விலை ரூ.9999 எனவும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.11,499 எனவும் விற்பனைக்கு வருகிறது. குவாட் கேமரா அமைப்பு உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை ஜனவரி 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ரூ.1000 தள்ளுபடி அறிவிப்பு

ரூ.1000 தள்ளுபடி அறிவிப்பு

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையின் ஒரு பகுதியாக மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.11,499 எனவும் வாங்கலாம்.

வங்கி சலுகைகள்

வங்கி சலுகைகள்

கூடுதலாக எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது 10 சதவீதம் விலைக்குறைப்பை பெறலாம். அதோடு எச்டிஎஃப்சி வங்கி அட்டை பயனர்கள் வழக்கமான பரிவர்த்தனைகளின் போது இஎம்ஐ விருப்பத்துடனான தள்ளுபடியையும் பெறலாம்.

அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங் விவகாரம்: ராணுவ ரகசியத்தை முன்கூட்டியே விவாதித்த அர்னாப்!அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங் விவகாரம்: ராணுவ ரகசியத்தை முன்கூட்டியே விவாதித்த அர்னாப்!

இரண்டு வண்ண விருப்பங்கள்

இரண்டு வண்ண விருப்பங்கள்

தற்போதுவரை பிளிப்கார்ட்டில் விலை மாற்றம் செய்யவில்லை என்றால் விரைவில் புதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 வெள்ளை மற்றும் பச்சை என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டிசம்பர் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பை கொண்டுவரும் புதிய புதுப்பிப்பை இந்த ஸ்மார்ட்போன் பெறுகிறது.

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 அம்சங்கள் குறித்து பார்க்கையில் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மெலிதான பெசல்கள், மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட்டுடன் வருகிறது. தடையற்ற அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் பின்புற மேல் இடது மூலையில் செங்குத்தாக செவ்வக வடிவ குவாட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. நைட் மோட் ஆதரவுடன் இந்த கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் முன்பக்கத்தின் நடுவில் பஞ்ச் ஹோல் கட் அவுட்டுடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 2 நாட்கள் வரை ஆயுள் நீடிக்கும். அதேபோல் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 வேகமான சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் 18 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax In Note 1 Smartphone Available at a Discounted price at Flipkart big Saving Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X