சத்தமில்லாமல் விலையை அதிகரித்த மைக்ரோமேக்ஸ்.. இனி மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 சாதனத்தின் விலை இது தான்..
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சத்தமில்லாமல் தனது மைக்ரோமேஸ் இன் நோட் 1 சாதனத்திற்கு விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ரூ.500 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேஸ் இன் நோட் 1 மாடல் அதே ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400×1080 பிக்சல் தீர்மானம், 21:9 என்ற திரைவிகிதம், 450nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

48எம்பி பிரைமரி கேமரா
மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் இட்ம்பெறுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இணையம், வீடியோ கேம் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தலாம். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்களில் ப்ராக்ஸிமிட்டி, லைட், ஆக்ஸிலரோமீட்டர், காம்பஸ், கைரோஸ்கோப் போன்றவை இடம்பெற்றுள்ளது. பின்பு புளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோமேஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications