Home
Mobile

13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போன்.!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனை IN 2b என்ற பெயரில் ஜூலை 30-ம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாதனத்தின் வண்ணம் மற்றும் பின்புற வடிவமைப்பை உறுதிப்படுத்தும் டீஸர் வீடியோவைப் பகிர்ந்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போன்.!

வீடியோவின் படி, வரவிருக்கும் IN 2b மாடல் ஆனது கருப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இதுதவிர எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் இரண்டு கேமராக்கள் இந்த IN 2b போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே கசிந்த IN 2b சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்பபோம்.

இந்த மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும். மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இதன்
வடிமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹிலியோ ஜி35 சிப்செட் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் சென்சார் + 2எம்பி டெப்த் என இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அதேபோல் மைக்ரோமேக்ஸ் IN 2b ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக
இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax IN 2b with 13 Mega Pixel Camera Launching in India on July 30: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X