சரியா நாளை மதியம் 12 மணி: ரூ.7999 விலையில் அட்டகாச மைக்ரோமேக்ஸ் இன் 2பி- பிளிப்கார்ட்டில் விற்பனை!

|

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையும், சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையையும் அறிவித்துள்ளது.

சரியா நாளை மதியம் 12 மணி:ரூ.7999 விலையில் அட்டகாச மைக்ரோமேக்ஸ் இன் 2பி

அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் அறிவித்த பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை குறித்து பார்க்கலாம். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின 2021 விற்பனையில் முன்னணி மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏதேனும் கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த பிக் சேவிங் தின விற்பனை நடைபெறும் அதே நாளில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் பெஸ்டிவல் 2021 விற்பனையும் நடைபெறுகிறது. இரண்டு தளங்களிலும் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேகமாக நாளை விற்பனைக்கு வரும் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி சாதனம் நோ ஹேங் அம்சத்தோடு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் ரூ.7,999-க்கு கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியா நாளை மதியம் 12 மணி:ரூ.7999 விலையில் அட்டகாச மைக்ரோமேக்ஸ் இன் 2பி

புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2பி என்ற No Hang ஸ்மார்ட்போன் மாடலை நம்ப முடியாத விலை புள்ளியின் கீழ் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது.

மைக்ரோமேக்ஸ் in 2b ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் நாளை விற்பனைக்கு வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது 400 நிட்ஸ் பிரகாசம், 89% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 20: 9 உடன் வருகிறது. இந்த சாதனம் யுனிசாக் T610 ஆக்டா கோர் சிப்செட் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இல் சேமிப்பு 64 ஜிபி ஆகும். மேலும் இது 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுடன் மேலும் விரிவாக்க விருப்பத்துடன் வருகிறது.

பின்புறத்தில் உள்ள இரட்டை கேமராக்களில் 13 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 5 எம்.பி கேமரா உள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே ஸ்டைலில் உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இல் உள்ள கேமரா அம்சங்கள் நைட் மோட், போட்ரைட், மோஷன் ஃபோட்டோ, பியூட்டி மோட், ப்ளே மற்றும் பாஸ் வீடியோ ஷூட், ஃபுல் எச்டி முன் மற்றும் பின் பதிவு ஆகியவை அடங்கும்.

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 160 மணிநேர இசை பின்னணி, 20 மணிநேர உலாவுதல், 15 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 50 மணிநேர பேச்சு நேரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.

Best Mobiles in India

English summary
Micromax In 2B sale starts tomorrow at 12 noon on Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X