Home
Mobile

டூயல் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனை இன்று இந்தயாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் In 2b விலை

மைக்ரோமேக்ஸ் In 2b விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு இதன்6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 6-ம் தேதி இந்தசாதனம் பிளிப்கார்ட் மற்றும் Micromaxinfo.com தளங்களில் விற்பனைக்கு வரும்.

 வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே

வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே

மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனில் Unisoc T610 ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இரண்டு கேமராக்கள்

இரண்டு கேமராக்கள்

இந்த மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் In 2b சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

வைஃபை 802.11, புளூடூத்

VoWiFi, டூயல் வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோமேக்ஸ் In 2b ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Micromax In 2b Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X