Micromax in 1b இன்று விற்பனை கிடையாது.. இறுதி நேரத்தில் டிவிஸ்ட் எடுக்க இதுதான் காரணமா?
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி (Micromax in 1b) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவிருந்தது, ஆனால், இப்போது Micromax இன் 1 பி இன்று விற்பனைக்கு வரப்போவதில்லை என்று நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை தாமதமானது. புதிய விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனை தாமதமாக இதான் காரணமா?
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், "தளவாடங்கள் தொடர்பான சிக்கல் காரணமாகத் திட்டமிட்டபடி இன்று மைக்ரோமேக்ஸ் இன் 1 பி விற்பனைக்கு வரவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்ததற்கு வருத்தப்படுகிறோம். புதிய விற்பனை தேதி விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன்
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன், புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 உடன் இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 முதல் விற்பனை நவம்பர் 24 அன்று துவங்கிச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், இப்பொழுது புதிய மைக்ரோமேக்ஸ் இன் 1 பி போனின் விற்பனை சற்று தாமதமாகியுள்ளது.

விலை என்னவாக இருக்கும்?
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன், 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெறும் ரூ .6,999 என்ற விலையில் வெளியாகவிருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .7,999 என்ற விலையில் பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சம்
- 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
- 2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
- 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
- 8 எம்.பி கேமரா
- 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications