4 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999 மட்டுமே: மைக்ரோமேக்ஸ் இன் 1பி விற்பனை தேதி அறிவிப்பு!

|

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விற்பனை மற்றும் கிடைக்கும் தளங்கள் குறித்து பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன், புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 உடன் இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 முதல் விற்பனை நவம்பர் 24 அன்று துவங்கிச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், மைக்ரோமேக்ஸ் இன் 1 பி போனின் விற்பனை சற்று தாமதமானது.

டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனை

டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனை

இந்த நிலையில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தளவாடங்கள் சிக்கல் தொடர்பான சிக்கல் காரணமாக ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ரத்து செய்யப்பட்டது.

2ஜிபி மற்றும் 4ஜிபி வேரியண்ட்

2ஜிபி மற்றும் 4ஜிபி வேரியண்ட்

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன், 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெறும் ரூ.6,999 என்ற விலையில் வெளியாகவிருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,999 என்ற விலையில் பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மைக்ரோமேக்ஸ் இன் 1பி 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 64 ஜிபி உள்சேமிப்பு வழங்கப்படுகிறது. இதில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. அதோடு முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் வசதி இருக்கிறது. இதில் இணைப்பு ஆதரவுகளாக 4ஜி வோல்ட்இ, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax in 1b Smartphone Going to Sale on 10th December

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X