இன்று விற்பனைக்கு வரும் Micromax in 1b.! விலை எவ்வளவு? என்னென்ன சலுகைகள்.!
இன்று பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 பி மாடல் ரூ.6,999-விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 பி மாடல் ரூ.7,999-விலையிலும் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ்.காம் வழியாக இன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போனின் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 பி சாதனம் பச்சை, நீலம் மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் தள்ளுபடி, மற்றும் மாதத்திற்கு ரூ.778 என்கிற நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் ஆகியவைகள் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் விருப்பங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என இரட்டை பின்புற கேமரா உள்ளது. அதோடு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி என இரட்டை சேமிப்பு வசதி இருக்கிறது. அதோடு மைக்ரோ எஸ்டிகார்ட் வழியாக சேமிப்பகத்தை விரிவாக்கலாம்.

இணைப்பு ஆதரவுகளாக 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை உள்ளது. அதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்
6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
8 எம்.பி கேமரா
10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
5,000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications