Micromax in 1b ஒரு வழியாக இன்று விற்பனைக்கு வருகிறது.. விலை மற்றும் சிறப்பம்சம் விபரம்..

|

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி (Micromax in 1b) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஒரு வழியாக இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்பும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனை பற்றி அறிவித்தது, ஆனால் இறுதி நேரத்தில் இப்போது Micromax இன் 1 பி இன்று விற்பனைக்கு வரப்போவதில்லை என்று நிறுவனம் அறிவித்தது. இப்பொழுது ஒரு வழியாக மீண்டும் விற்பனையை அறிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், "தளவாடங்கள் தொடர்பான சிக்கல் காரணமாகத் திட்டமிட்டபடி மைக்ரோமேக்ஸ் இன் 1 பி அறிவித்த நேரத்தில் முன்பு விற்பனைக்கு வராமல் போனதற்கு நாங்கள் வருந்துகிறோம். புதிய விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்பே கூறியிருந்தோம், அதனை தொடர்ந்து பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைத்தளம் வழியாக இன்று விற்பனையை துவங்கியுள்ளோம்'' என்று நிறுவனம் கூறியுள்ளது.

நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்ப்பு

நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்ப்பு

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன், புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 உடன் இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 முதல் விற்பனை நவம்பர் 24 அன்று துவங்கிச் சிறப்பாக நடைபெற்றது. இப்பொழுது புதிய மைக்ரோமேக்ஸ் இன் 1 பி போனின் விற்பனை துவங்கியுள்ளதால், இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!

விலை

விலை

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போனின், 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ .6,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .7,999 என்ற விலையில் பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சம்

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சம்

  • 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
  • 2 ஜிபி / 4 ஜிபி ரேம்
  • 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
  • 13MP முதன்மை கேமரா
  • 2MP டெப்த் சென்சார்
  • 8 எம்.பி கேமரா
  • 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Micromax in 1b First Sale Via Flipkart and Microsoft Website : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X