நம்ப முடியாத மலிவு விலையில் மிரட்டலான Micromax In நோட் 1 மற்றும் In 1B.. விலை என்ன தெரியுமா?

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இறுதியாக இன்று தனது புதிய பிராண்டின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் சாதனம் இன்(in) நோட் 1 மற்றும் இன் 1B என்ற இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து, பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன்(in) ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன்(in) ஸ்மார்ட்போன்

இந்தியச் சந்தையில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய மைக்ரோமேக்ஸ் இன்(in) ஸ்மார்ட்போன்கள் சியோமி, சாம்சங், ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ .10,999 ஆகவும், அதன் 4 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் ரூ .12,499 என்ற விழியில் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலையில் போன்கள்

பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலையில் போன்கள்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் மட்டுமின்றி, நம்பமுடியாத மலிவு விலையிலும் இரண்டு வேரியண்ட் மாடல்களை இன் 1B ஸ்மார்ட்போன் மாடலின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போனின், 2 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட் ரூ .6,999 ஆகவும், இதன் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ .7,999 என்ற நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

 • 6.67' இன்ச் முழு எஃப்.எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
 • ஆண்ட்ராய்டு 10
 • 1000MHz ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு கொண்ட 4 ஜிபி LPPDDR4x ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • எஸ்.டி கார்டு ஸ்லாட் வசதி
 • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
 • 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
 • 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா
 • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
 • 16 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
சென்சார்
 • எப்எம் ரேடியோ
 • கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
 • பின்புற கைரேகை சென்சார்
 • டூயல் 4ஜி வோல்ட்இ
 • வைபை
 • ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப் சி
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • 18W பாஸ்ட் சார்ஜிங்
 • 5000 எம்ஏஎச் பேட்டரி

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

 • 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
 • 2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
 • 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
 • 8 எம்.பி கேமரா
 • 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
 • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax In 1B and In Note 1 Launched in India at cheap price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X