மார்ச் 19 அறிமுகமாகும் மைக்ரோமேக்ஸ் இன் 1: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!
மைக்ரோமேக்ஸ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துக்கு என வாடிக்கையாளர்கள் உள்ளனர். மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் தொடர்ந்து பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த பிராண்ட் மார்ச் 19 ஆம் தேதி நாட்டில் மைக்ரோமேக்ஸ் 1-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1 வெளியீடு நிறுவனம் பகிர்ந்த தகவலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டு தகவல் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த எந்த அம்சங்களையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான முந்தைய தகவலின்படி மைக்ரோமேக்ஸ் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி95 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மீடியா டெக் ஹீலியோ ஜி95 இடைப்பட்ட கேமிங் செயலியாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஹீலியோ ஜி95 செயலியானது 2.05ஜிஹெர்ட்ஸ் மூலம் இயங்கும் கார்டெக்ஸ்-ஏ 55 சக்தி திறன் கொண்ட சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆர்ம் மாலி ஜி76 எம்சி 4 உடன் 900 மெகா ஹெர்ட்ஸ் மூலம் இயங்குகிறது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மற்றும் இன் 1பி வரிசையில் மைக்ரோமேக்ஸ் இன் 1 அறிமுகமாக உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன்1 பி ரூ.6999 எனவும் நோட் 1 ரூ.10,999 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்

6.67' இன்ச் முழு எஃப்.எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10
1000MHz ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு கொண்ட 4 ஜிபி LPPDDR4x ரேம்
64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
எஸ்.டி கார்டு ஸ்லாட் வசதி
48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா
2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
16 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
எப்எம் ரேடியோ
கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
பின்புற கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ
வைபை
ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
18W பாஸ்ட் சார்ஜிங் 5000 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
8 எம்.பி கேமரா
10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
5,000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications