இன்று ரூ.9,999 விலையில் விற்பனைக்கு வரும் மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன்.! முழு விவரங்கள்.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக அசத்தலான கேமராக்கள், தனித்துவமான சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.10,499-விலையிலும், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.11,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இன்று இந்த சாதனத்தின் அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999-விலையிலும், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.11,499-விலையிலும் வாங்க முடியும்.

பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே

பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே

குறிப்பாக பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, மூன்று ரியர் கேமரா ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் நல்ல சிப்செட் வசதி உள்ளிட் பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

 1080 x 2460 பிக்சல் தீர்மானம்

1080 x 2460 பிக்சல் தீர்மானம்

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 450nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி : மலிவு விலையில் வாங்க கூடிய அடுத்த 5 ஜி ஃபிளாக்ஷிப் போன்.சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி : மலிவு விலையில் வாங்க கூடிய அடுத்த 5 ஜி ஃபிளாக்ஷிப் போன்.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி

இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

உஷார்: இரவில் சார்ஜ் போடுபவரா?- போர்வையில் தீப்பிடித்து பெண் முகத்தில் தீக்காயம்- ஐபோன் சார்ஜர் வெடித்ததா?உஷார்: இரவில் சார்ஜ் போடுபவரா?- போர்வையில் தீப்பிடித்து பெண் முகத்தில் தீக்காயம்- ஐபோன் சார்ஜர் வெடித்ததா?

ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

 48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இட்ம்பெறுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்று இடம்பெற்றுள்ளது.

ஒருவரின் உண்மை கதை: படிப்பு: 10-வது., ஒருவரின் உண்மை கதை: படிப்பு: 10-வது., "செக்யூரிட்டு டூ டெக் அதிகாரி": வைரலாகும் ஜோஹோ ஊழியர் வாழ்க்கை பயணம்!

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இணையம், வீடியோ கேம் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தலாம். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Viஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Vi

ளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்களில் ப்ராக்ஸிமிட்டி, லைட், ஆக்ஸிலரோமீட்டர், காம்பஸ், கைரோஸ்கோப் போன்றவை இடம்பெற்றுள்ளது. பின்பு புளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன்.

உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் வச

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் விலைக்கு தகுந்த ஸ்மார்ட்போன் மாடல் தான் இது. அதிலும் 48எம்பி ரியர் கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் வசதி, 6.67-இன்ச் டிஸ்பிளே என அனைத்து சிறப்பான அம்சங்களையும் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன். அதேபோல் கூடிய விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது மிகவும் நல்லது என்றே கூறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
MICROMAX IN 1 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X