அடுத்த பட்ஜெட் விலை போனாக மைக்ரோமேக்ஸ் in 1 அறிமுகம்..
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் 1 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மைக்ரோமேக்ஸ் In 1 வெளியீடு பற்றி நிறுவனம் பகிர்ந்த அழைப்பின் மூலம் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போனில் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்டா?
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய பிரத்தியேக அறிக்கையின்படி, மைக்ரோமேக்ஸின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் உடன் செயல்படக்கூடிய பிராசஸரை அடிப்படையாகக் கொண்டது. இந்த மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் ஒரு இடைப்பட்ட கேமிங் மையப்படுத்தப்பட்ட பிராசஸராக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் விலையில் சிறந்த செயல்
மீடியா டெக் ஹீலியோ ஜி 95 ஆனது 2.05GHz வரை இயங்கும் ஒரு ஜோடி ஆர்ம் கார்டெக்ஸ்-ஏ 76 சிபியுக்களைக் கொண்டுள்ளது, இது ஆறு கோர்டெக்ஸ்-ஏ 55 சக்தி திறன் கொண்ட சிபியுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட ஆர்ம் மாலி-ஜி 76 எம்சி 4 உடன் 900 மெகா ஹெர்ட்ஸ் வரை இது இயங்குகிறது. ஆதலால், இந்த புதிய மைக்ரோமேக்ஸ் 1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்து செயல்பட கூடிய சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிகிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1 பி
கடந்த ஆண்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1 பி என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. தற்பொழுது, இந்த வரிசையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்றாவது புதிய ஸ்மார்ட்போன் மாடலாக மைக்ரோமேக்ஸ் in 1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது.
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1 பி விலை
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் சுமார் ரூ. 6,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. அதேபோல், மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ரூ. 10,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சம்
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 இல் 6.67 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. ஸ்மார்ட்போனில் ஒரு குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் ஸ்னாப்பர்கள் உள்ளன. இதில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் தொகுக்கிறது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்டோரேஜ் விருப்பம்
இந்த ஸ்மார்ட்போன் 2.0Ghz உடன் கூடிய மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடலாகவும்,128 ஜிபி சேமிப்புடன் வருகிறது. விரிவாக்கத்திற்காக 256 ஜிபி சேமிப்பகத்தின் மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இது பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் IN 1 பி சிறப்பம்சம்
மைக்ரோமேக்ஸ் IN 1 பி இல் உள்ள மைக்ரோமேக்ஸ் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 2 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் ஜோடியாக இருக்கும் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
மைக்ரோமேக்ஸ் IN 1 பி ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்
இதில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் 2 வருட உத்தரவாத ஓஎஸ் புதுப்பிப்புகளுடன் இயங்குகிறது. இது 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாதனம் செல்ஃபிக்களுக்கான 8 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது.

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் என்ன விலையில், என்ன-என்ன சிறப்பம்சங்களுடன் இந்திய சமர்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாக நமக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக நிறுவனம் அதன் முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்களை விட மிகவும் அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை தான் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுவதாக நமக்கு தெரிந்த செய்தி தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும் மார்ச் 19ம் தேதி வெகு தொலைவில் இல்லை என்பதனால் நாம் சற்று பொறுமை காத்திருந்து, வரும் வாரங்களில் இந்த புதிய போன் பற்றிய கூடுதல் தகவலை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications