மிகவும் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யபட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸமார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

 மைக்ரோமேக்ஸ் இன் 1 விலை

மைக்ரோமேக்ஸ் இன் 1 விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.10,499-விலையிலும், இதன் 6ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.11,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சாதனத்தின் அறிமுக சலுகையாக வரும் மார்ச் 26-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 மற்றும் ரூ.11,499-விலையில்இந்த இரண்டு வேரியண்ட்களை வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா ஆதரவு, 5

குறிப்பாக பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, மூன்று ரியர் கேமரா ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் நல்ல சிப்செட் வசதி உள்ளிட் பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

Redmi Note 9, Redmi 9 Prime, Redmi 9i மீது தற்காலிக விலை குறைப்பு.. புது விலை இவ்வளவு கம்மியா?Redmi Note 9, Redmi 9 Prime, Redmi 9i மீது தற்காலிக விலை குறைப்பு.. புது விலை இவ்வளவு கம்மியா?

 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 450nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்

இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

மலிவு விலையில் டேப்லெட் வாங்கணுமா? அப்போ லாவா அறிமுகம் செய்த இந்த மாடல்களை பாருங்க..மலிவு விலையில் டேப்லெட் வாங்கணுமா? அப்போ லாவா அறிமுகம் செய்த இந்த மாடல்களை பாருங்க..

4ஜிபி/6ஜிபி

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

JioFiber டேட்டா பயன்பாட்டு பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது? JioFiber 30 நாள் இலவச சோதனை பற்றி தெரியுமா?JioFiber டேட்டா பயன்பாட்டு பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது? JioFiber 30 நாள் இலவச சோதனை பற்றி தெரியுமா?

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இட்ம்பெறுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்று இடம்பெற்றுள்ளது.

ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இணையம், வீடியோ கேம் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தலாம். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சென்சார்களில் ப்ராக்ஸிமிட்டி, லைட், ஆக்ஸிலரோமீட்டர்,

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்களில் ப்ராக்ஸிமிட்டி, லைட், ஆக்ஸிலரோமீட்டர், காம்பஸ், கைரோஸ்கோப் போன்றவை இடம்பெற்றுள்ளது. பின்பு புளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு போன் பயனரா நீங்கள்? உடனே 'இதை' உங்கள் போனிலிருந்து டெலீட் செய்யுங்கள்..ஆண்ட்ராய்டு போன் பயனரா நீங்கள்? உடனே 'இதை' உங்கள் போனிலிருந்து டெலீட் செய்யுங்கள்..

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் விலைக்கு தகுந்த ஸ்மார்ட்போன் மாடல் தான் இது. அதிலும் 48எம்பி ரியர் கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் வசதி, 6.67-இன்ச் டிஸ்பிளே என அனைத்து சிறப்பான அம்சங்களையும் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன். அதேபோல் கூடிய விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் எனஅந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது மிகவும் நல்லது என்றே கூறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax In 1 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X