Home
Mobile

Micromax In 1 கீக் பெஞ்ச் ஸ்கோரிங் மற்றும் அறிமுகம் விலை இது தான்..

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மார்ச் 19 ஆம் தேதி இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. மைக்ரோமேக்ஸ் 1 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ டீஸர் செல்பி கேமராவை மையமாகக் கொண்ட ஒரு மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் தற்பொழுது கீக் பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை நாம் பார்க்கலாம்.

கீக்பெஞ்ச் ஸ்கோர்

கீக்பெஞ்ச் ஸ்கோர்

கீக்பெஞ்ச் பட்டியலில், மைக்ரோமேக்ஸ் இன் 1 சிங்கிள் கோர் சோதனையில் 361 மதிப்பெண் பெற்றுள்ளது. அதேபோல், மல்டி கோர் சோதனையில் 1318 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் MT6769V / CT சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. இது ஹீலியோ ஜி 80 சிப்செட் ஆகும். இந்த சிப்செட் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாதனம் மற்ற ரேம் வகைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1

மைக்ரோமேக்ஸ் இன் 1

மைக்ரோமேக்ஸ் இன் 1 எழுத்தாளர் துஷார் மேத்தா தனது ட்விட்டரில் பக்கத்தில் மைக்ரோமேக்ஸ் இன் 1 இன் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன், மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் உடன், 48 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றுடன் வெளிவருகிறது. இந்த விவரக்குறிப்புகளைப் பார்க்கும்போது, ​​ஸ்மார்ட்போன் ரூ.9,999 அல்லது ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பஞ்ச் ஹோல் கட்அவுட்டு டிஸ்பிளே

பஞ்ச் ஹோல் கட்அவுட்டு டிஸ்பிளே

மைக்ரோமேக்ஸ் 1 இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடுவது போல, மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன், நோட் 1 மற்றும் இன் 1 பி ஸ்மார்ட்போன்களுக்கு இடைப்பட்ட மாடலாக அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. கசிந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச தகவல்கள் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஐப் போன்று உள்ளது. இது பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் மூலம் இயங்கக்கூடியது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ் விருப்பம் இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த் புதிய போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலும் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பிற விவரக்குறிப்புகளை பொறுத்தவரையில், இது 2MP சென்சார்களுடன் ஜோடியாக பின்புறத்தில் 48MP பிரைமரி லென்ஸ் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் இல்லை என்று கூறப்படுகிறது.

18W பாஸ்ட் சார்ஜிங்

18W பாஸ்ட் சார்ஜிங்

பேட்டரி மாறும் சார்ஜிங் ஆதரவு முன்பக்கத்தில் 8 எம்பி கொண்ட செல்பி ஸ்னாப்பர் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில், இதற்கு முந்தைய மாடலான மைக்ரோமேக்ஸ் இன் 1 பி க்கு ஒத்த பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும். பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் அடியில் உள்ள ஹீலியோ ஜி 80 சிப்செட் போன்ற சில மாற்றங்களைத் தவிர முந்தைய மாடலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

விலை என்னவாக இருக்கும்?

விலை என்னவாக இருக்கும்?

மைக்ரோமேக்ஸ் இன் 1 இன் எதிர்பார்க்கப்படும் விலை சுமார் 9,999 அல்லது ரூ .8,999 ஆகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மே நர்சோ 30 ஏ, ஹீலியோ ஜி 85 சிப்செட் உடன், 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை கேமரா அமைப்புடன் வெறும் ரூ .8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், மைக்ரோமேக்ஸ் இன் 1 போனும் ரூ.8,999 விலையில் அறிமுகப்படுத்தினால் நிச்சயம் இது அதிக வரவேற்பை பெரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Micromax In 1 appears on Geekbench ahead of launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X