அதிவேக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குடன் பட்ஜெட் மொபைல்

Posted By: Staff

அதிவேக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குடன் பட்ஜெட் மொபைல்
மொபைல் தயாரிப்புகளில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்று வரும் இந்நிறுவனம் எச்-360 என்ற மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால் தற்பொழுது டில்லி மற்றும் மும்பையில் இந்த மொபைல் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தனை மொபைல்கள் தயாரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மொபைலும் வெவ்வேறு தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. இதனால் அந்த புதிய தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.

இந்த எச்-360 மொபைல் பற்றியும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மொபைல் 2.4 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை நுட்பம் கொண்டது.

எந்த தகவல்கள்களையும் நொடியில் பார்ப்பதற்கு, இதன் தொடுதிரையை ஒரு விரலில் லேசாக தொட்டால் போதும், விவரங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வந்து குவிகின்றது. இது எல்சிடி தொழில் நுட்பமும் கொண்டதாக இருக்கிறது.

104 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் கண்கவரும் வண்ணம் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனுடைய கேமரா துல்லியத்தைக் கேட்டால் போதும், இந்த மொபைலை இன்றே வாங்கத் தோன்றும். அந்த அளவு துல்லியம் கொண்டது. இந்த மொபைல் 3.0 மெகா பிக்ஸல் கேமரா கொண்டதோடு மட்டும் அல்லாமல் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தை கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் கொடுக்கிறது.

கேமராவின் துல்லியத்தை தவிர வேறு ஏதாவது ஸ்பெஷல் தொழில் நுட்பம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது.

2ஜி மற்றும் 3ஜி நெட்வெர்க் வசதியையும் இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இளம் வயதில் உள்ளவர்கள் மட்டும் அல்ல பெரிய வயதில் உள்ளவர்களையும் இந்த 2ஜி, 3ஜி தொழில் நுட்பம் எளிதில் ஆக்கிரமித்துவிடுகிறது. அதனால் இந்த வசதிகள் கொண்ட மொபைலை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதோடு 8ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 5எம்பி வரை இன்டர்னல் மெமரியும் உள்ளது. மொபைலில் உள்ள தகவல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நிச்சயம் அதற்கு மெமரி வசதி அவசியம் தேவைப்படுகிறது. எச்-360 மொபைலை பொருத்த வரையில் மெமரி பற்றி யோசிக்க வேண்டிய தேவை ஏற்படாது.

2ஜி, மற்றும் 3ஜி வசதியே இருக்கும் பொழுது புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகள் பற்றி கேட்க வேண்டுமா? புளூடூத் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளவது சுலபமாகிறது.

1,000 எம்ஏஎச் லித்தியம் பேட்டரியினால் 4மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் பெற முடிகிறது. என்னென்ன அடிப்படை வசதிகளை மக்கள் எதிர் பார்க்கிறார்களோ அந்த வசதிகளைவிட அதிகமான வசதிகளை கொடுக்கின்றது.

இந்த மொபைலின் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்களுக்கும் சப்போர்ட் கொடுக்கிறது. 2ஜி, 3ஜி நெட்வொர்க் கொண்ட இந்த எச்-360 மொபைல் ரூ.5,500 விலையில் இருந்து ரூ.6,000 விலை வரையில் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்