மைக்ரோமேக்ஸ் இங்கு வரப்போகுது...!

Posted By:

இந்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, ஸ்மார்ட் போன் விற்பனையில், இரண்டாவது இடத்தை, மைக்ரோமேக்ஸ் பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது.


சீன நிறுவனங்கள், மொபைல் போன்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை, மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற இந்திய நிறுவனங்களுடன் மேற்கொண்டு, அவற்றைத் தயாரித்து தருகின்றன.

தற்போது ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 21 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதனைக் கருத்தில் கொண்டு, இங்கேயே, போன்களை அசெம்பிள் செய்திட முடிவெடுத்துள்ளது.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

மைக்ரோமேக்ஸ் இங்கு வரப்போகுது...!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

மேலும், இறக்குமதியில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் இதனால் தீரும் என்று எண்ணுகிறது.

இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் தன் மொபைல் போன் விற்பனையைத் தொடங்கிட மைக்ரோமேக்ஸ் திட்டமிடுகிறது.

இந்தியாவில் இயங்க இருக்கும் அசெம்பிளிங் தொழிற்சாலை, இதற்கு உதவியாய் இருக்கும்.

ரஷ்யா, ரொமானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் அடுத்த ஆறு மாதங்களில், புதியதாக 20 மாடல் போன்களை மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot