விமர்சனம் : மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்.!
மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்: 3 ஜிபி ரேம்இ 32ஜிபி வரை மெமரி.!
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் தனக்கென ஒரு தனிசிறப்பு பெற்றது மைக்ரோமேக்ஸ். அடுத்து வரும் மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சீன மொபைல் பிராண்ட்கள் விட மைக்ரோமேக்ஸ் பல திறமைகளை பெற்றுள்ளது என மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா தெரிவித்தார்.
தற்போது வரும் மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த போன்கள் பட்டியலில் இதுவும் இடம்பெரும். இதன் பேட்டரி இயக்கம் பொருத்தமாட்டில் அதிக நேர இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு உதவும்.

மைக்ரோமேக்ஸ்:
மைக்ரோமேக்ஸ் பொருத்தமாட்டில் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும், மேலும் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மென்பொருள்கள் பொருத்தமாட்டில் ஒரு தனிச்சிறப்பு பெற்றது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் 2.5டி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:
இவோக் நோட் பொருத்தவரை ஒரு கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இது இவற்றில் அமைந்த ஒரு சிறப்பான செயல்பாடகும், மேலும் முக்கியமான தரவுகளைப் பாதுகாக்க இந்த கைரேகை ஸ்கேனர் பயன்படுகிறது.

கேமரா:
மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

கேமரா சென்சார்:
மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மிக வேகமாக இயங்கும் தன்மை கொண்டவை, மேலும் புகைப்படங்களை மிகத்தெளிவாக பிடிக்கும் திறமைக் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் சாப்ட்வேர்:
மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் எம்டி 6753 ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 430 சிபியு, ஆண்ட்ராய்டு6.0 மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்.

விலை:
இதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.9,449 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications