அறிமுகம் : டூயல் கேம்; 3ஜிபி ரேம்; 3000எம்ஏஎச் பேட்டரியுடன் எவோக் டூவல் நோட்.!

|

மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் ஆனது எவோக் டூவல் நோட் என்று அழைக்கப்படுகிறது. முன்னர் அறிவிக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் எவோக் நோட் மற்றும் எவோக் பவர் சாதனங்களின் அநேக வரிசையை இந்த ஸ்மார்ட்போன் தொடர்கிறது.

அறிமுகம் : டூயல் கேம்; 3ஜிபி ரேம்; 3000எம்ஏஎச் எவோக் டூவல் நோட்.!

இந்த புதிய எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சமாக இதன் கேமரா திகழ்கிறது. இந்த மைக்ரோமேக்ஸ் போன் ஆனது "மிக உயர்ந்த கேமரா தரத்தின் கலவையாகும்" மற்றும் "சிறந்த செயல்திறன்" கொண்ட சாதனமாகும் என்று நிறுவனம் கூறுகிறது. இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன மற்றும் விலை நிர்ண்யம் என்ன.?

எச்டி டிஸ்ப்ளே

எச்டி டிஸ்ப்ளே

5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த சாதனம் "அதிக மாறுபாட்டு விகிதத்துடன் ஆழமான மற்றும் தெளிவான படங்களை வழங்குவதாக" நிறுவனம் கூறுகிறது. ஒரு உலோக பின்புலத்துடன் கட்டப்பட்டுள்ள இந் ஸ்மார்ட்போன் அதன் பக்கங்களில் வில் வளைவுகளைக் கொண்டுள்ளது.

கேமிங் அல்லது மல்டிட்கஸ்கிங்

கேமிங் அல்லது மல்டிட்கஸ்கிங்

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் இது மீடியாடெக் எம்டி6750 உடனான ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 30 சதவிகித மின் நுகர்வு வரை சேமிக்க உதவும் இக்கருவி கேமிங் அல்லது மல்டிட்கஸ்கிங்கில் சிறப்பாக செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில் இக்கருவி ஒரு இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. இரண்டு கேமராக்களில் ஒன்று -13 மெகாபிக்சல் சென்சார் மற்றொன்று 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டு வருகிறது. மேலும் இதன் பின்புற கேமரா நிகழ்நேர ரீ-ஃபோகஸ் அம்சத்துடன் இணைக்கப்படுகிறது, இது பயனர்கள் படப்பிடிப்புக்குப் பிறகும் கூட ஒரு படத்தின் மையப் பகுதியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

இந்த அம்சம் எஸ்.எல்.ஆர் கேமராவின் மேக்ரோ முறைக்கு ஒத்திருக்கும். உடன் மோனோக்ரோம், ஸ்ட்ராங், பிளாக்போர்ட், வைட்போர்ட், 3டி, பனோரமா போன்ற பல கேமரா அம்சங்களை இது கொண்டுள்ளது. தொலைபேசியின் செல்பீ கேமராவை பொறுத்தமட்டில், பியூடிப்பை மற்றும் சில பில்டர்ஸ் உடனான 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்

இரண்டு வேரியண்ட்

புதிய மைக்ரோமேக்ஸ் எவோக் டூயல் நோட் கருவியின் டிஸ்பிளேவின் கீழ் கைரேகை சென்சார் இடம்பெறுகிறது. மேலும் இக்கருவி இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்று 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு உள்ளது, மறுபக்கம் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு என்ற மாறுபாடும் உள்ளது. உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு இடம் உள்ளது. குறிப்பாக 4ஜிபி மாறுபாடானது பர்ஷியன் ப்ளூ மாறுதலில் கிடைக்கும்.

பேட்டரி

பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இக்கருவி 260மணி நேர காத்திருப்பு நேரம் வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது மேலும் இது 11 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 24 மணி நேர இடை பின்னணி நேரம் ஆகியவைகளையும் வழங்குகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், ஓடிஜி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி ஆகியவைகளை உள்ளடக்கியுள்ளது.

இஎம்ஐ

இஎம்ஐ

புதிய எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கும். மேலும், ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இஎம்ஐ மூலம் மாதம் ரூ.1667/- மட்டுமே செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெறலாம்.

விலை நிர்ண்யம்

விலை நிர்ண்யம்

மேலும் இந்த சாதனத்தை வாங்கும் ஐடியா பயனர்கள் ரூ.443/-க்கான நன்மைகளை, அதாவது 3 மாதங்களுக்கான தினசரி வரம்பில்லாத 84ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகளை பெறமுடியும். ரூ.9,999/- என்ற விலை நிர்ண்யம் கொண்டுள்ள எவோக் டூயல் நோட் ஆனது வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி 12 மணி முதல் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Micromax Evok Dual Note with dual rear cameras announced at Rs 9,999, will be Flipkart exclusive. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X