13 எம்பி டூவல் கேமரா கொண்டு அதிரடியாக களம் காணும் டூவல் 5.!

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நேற்று (புதன்) அதன் புதிய கருவியான டூவல் 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையை ஆட்கொள்ளும் என்று வெளிப்படையாக, சீன நிறுவனங்களுக்கு மட்டுமின்றி இதர இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சேர்த்தே சவால் விடுத்துள்ளது என்றே கூறலாம்.

ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளின் மூலம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த கருவி முன்பதிவுக்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டூவல் கேமரா

டூவல் கேமரா

மைக்ரோமேக்ஸ் டூவல் 5 கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை பின்புற கேமரா திகழ்கிறது. நிறுவனத்தின் முதல் டூவல் கேமரா அமைப்பு கொண்ட கருவி இதுதான் என்பதும் இதனை தொடர்ந்து டூவல் 4 கருவி வெளியாகும்.

ரியர் கேமரா

ரியர் கேமரா

எப் / 1.8 துளை இடம்பெறும் இரண்டு 13 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார்கள் கொண்டுள்ள இக்கருவியின் இரண்டு கேமராக்களில் ஒன்று மோனோக்ரோமிலும் மற்றொன்று ஆர்ஜிபி நிறத்திலும் கவனம் செலுத்தும். உடன் ஒரு வண்ண வெப்பநிலை சென்சார் ஒன்றும் சிறந்த படங்களை கைப்பற்ற உதவுகிறது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் மைக்ரோமேக்ஸ் டூவல் 5 ஒரு 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஒரு 1.12 மைக்ரான் பிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார் கொண்டு வருகிறது. எப்/2.0 துளை தாங்கியுள்ள இந்த செல்பீ கேமரா ஒரு மென்மையான சுயபடம் பிளாஷ் தொகுதியும் கொண்டுள்ளது. மேலும் ஒரு ஒருங்கிணைந்த ஸ்மார்ட்பியூட்டி மோட், கெஸ்டர் கண்ட்ரோல் மற்றும் கிப் மேக்கர் ஆகியவைகளும் கொண்டுள்ளது.

ஏர்கிராஃப்ட் கிரேட் அலுமினியம்

ஏர்கிராஃப்ட் கிரேட் அலுமினியம்

மைக்ரோமேக்ஸ் டூவல் 5 வடிவமைப்பை பொறுத்தமட்டில் ஏர்கிராஃப்ட் கிரேட் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆண்டென்னாவை உலோக சட்டம் மீது வைத்து, 3டி ஆண்டெனா தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் மைக்ரோமேக்ஸ் டூவல் 5 ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் ஒரு 100 சதவீதம் என்டிஎஸ்சி வண்ண வரம்பு கொண்ட சூப்பர் அமோ எல்இடி 2.5டி வளைந்த டிஸ்ப்ளே தாங்கியுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 652 எம்எஸ்எம்8976 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இக்கருவி 4ஜிபி ரேம் இணைந்து 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மற்றும் மைக்ரோ அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவும் வழங்குகிறது. ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஆதரவு கொண்ட இக்கருவி இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி4.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மற்றும் யூஎஸ்பி டைப் சி ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

இந்த ஸ்மார்ட்போன் 45 நிமிடங்களில் 95 சதவீதம் சார்ஜ் ஆகும் வண்ணம் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது மற்றும் 10 நிமிட சார்ஜ் ஆனது 4 மணி நேர பயன்பாட்டை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது. பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவு கொண்ட ஒரு 3200எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ள இக்கருவி 164 கிராம் எடையுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

0.2 வினாடிகளில் திறக்கக்கூடிய ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இக்கருவி ரூ.24,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த கருவி முன்பதிவுக்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.5,999/-க்கு 1 ஆண்டு இலவச இண்டர்நெட் உடன் 3ஜி6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax Dual 5 Price, Specifications and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X