ரூ .500 கோடி முதலீட்டுடன் புதிய துணை நிறுவனம் உருவாக்கிய Micromax.!

|

உள்நாட்டு மொபைல் போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய 'இன் (In)' என்ற துணை பிராண்டை இந்தியச் சந்தையில் ரூ .500 கோடி முதலீட்டுடன் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் மீண்டும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கால் பதிக்கும் முயற்சியில் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மா

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மா கூறுகையில், ''இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தேவை இப்பொழுது உருவாகியுள்ளது என்றும், சமீபத்திய இந்திய-சீன பதட்டத்திற்குப் பிறகு இந்தியத் தயாரிப்புகளுக்கு உள்நாட்டில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றும் ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.

புதிய 'இன்' பிராண்ட்

"எங்கள் புதிய 'இன்' பிராண்ட் உணர்வை பயன்படுத்தும் நோக்கமாகக் உருவாக்கப்படவில்லை, அம்சம் நிறைந்த தயாரிப்புகளின் ஆதரவுடன் ஒரு முழுமையான திட்டத்துடன் திரும்பி வர நாங்கள் விரும்பினோம். அடுத்த ஆண்டில் 12 முதல் 18 மாதங்கள் இடைவெளியில் மார்க்கெட்டிங் மற்றும் உற்பத்தி மேம்படுத்தல் காரணத்திற்காக இந்த நிறுவனத்தின் மீது ரூ .500 கோடியை முதலீடு செய்ய உள்ளோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

மலிவு விலை போன்

இந்தியச் சந்தையில் ஒரு முறை முன்னணியிலிருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சியோமி, ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தனது நிலையை உள்நாட்டில் இழந்தது. ஏனெனில் சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையை தங்கள் ஆக்ரோஷமான விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்தது. அதிகப்படியான மார்க்கெட்டிங் மற்றும் மலிவு விலை போன்களால் உள்நாட்டு நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

கோவிட் -19 காரணமாக

இருப்பினும், கோவிட் -19 காரணமாக விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் சீன எதிர்ப்பு உணர்வு காரணமாக, சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் இந்தியச் சந்தைப் பங்கு ஜூன் 2020 காலாண்டில் 72% ஆகக் குறைந்தது, முந்தைய மூன்று மாதங்களில் இது சுமார் 81% ஆக குறைந்துள்ளது என்பதே உண்மை. இந்த வாய்ப்பை பயன்படுத்து மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Micromax creates Rs 500-crore war chest to launch 'in' sub-brand : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X