விரைவில் : இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.
தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்ச்சி செய்கிறது, அதன்படி இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 22ம் தேதி அன்று நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் இந்த புதிய இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் தீர்மானம் எனக்கூறப்படுகிறது

கேலக்ஸி எஸ்8:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் வளைந்த கண்ணாடி இன்ஃபினிட்டி டிஸ்பிளே அமைந்துள்ளது, அதே போல்இந்த புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்பிளே அமைந்துள்ளது.

குவால்காம்:
மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி கொண்டிருக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டூயல் கேமரா:
மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டிவிட்டர்:
மைக்ரோமேக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் எவோக் டூயல் நோட் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications