8 எம்பி கேம் உடன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பீ 2 (அம்சங்கள்).!

முன்பக்கம் எதிர்கொள்ளும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா திகழ்கிறது. அந்த செல்பீ கேமரா தன்னுள் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன.? மற்றும் இக்கருவியின் இதர முக்கிய அம்சங்கள் என்னென்ன என்ற விவரங்கள் இதோ.

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் கேன்வாஸ் ஸ்மார்ட்போன் தொடரில்கேன்வாஸ் செல்பீ 2 என்றவொரு உறுப்பினரை சேர்க்க உள்ளது என்பது போல தெரிகிறது. மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அதன் சில முக்கிய குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த விவரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் முன்பக்கம் எதிர்கொள்ளும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா திகழ்கிறது. அந்த செல்பீ கேமரா தன்னுள் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன.? மற்றும் இக்கருவியின் இதர முக்கிய அம்சங்கள் என்னென்ன என்ற விவரங்கள் இதோ.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

இதன் செல்பீ கேமரா ப்ளூ கிளாஸ் ஐஆர் பில்டர், சோனி ஐஎம்எக்ஸ்135 சென்சார், எப்/2.0 துளை, 5பி லென்ஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் இதன் முன்பக்க கேமரா, ரியல் டைம் போக்கே விளைவு, பரந்த கோணம், டச் ஷாட் மற்றும் பேஸ் பியூட்டி போன்ற சில சுவாரஸ்யமான அம்சங்களையும் தன்னுள் கொண்டு வருகிறது.

5பி லென்ஸ்

5பி லென்ஸ்

பின்புற கேமராவை பொறுத்தமட்டில், 13-மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. எப்/2.0 துளை, ஓவி 8856 சென்சார், 84 டிகிரி வியூ, 5பி லென்ஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றுடன் இந்த கேமரா ஆட்டோ சீன டிடெக்ஷன், பனோரமா மற்றும் சூப்பர் பிக்சல் 5200எம் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

100 நாட்கள் மாற்று உத்தரவாதத்துடன்

100 நாட்கள் மாற்று உத்தரவாதத்துடன்

இந்த ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாட்கள் மாற்று உத்தரவாதத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் பயனர்கள் அதே அல்லது சமமான மாதிரியைப் பெறுவார்கள்.

பழுது செயல்முறை

பழுது செயல்முறை

மேலும் தாமதம் ஏதேனும் ஏற்பட்டால், மாற்று சாதனமானது 48 முதல் 72 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே ஆக்டிவேஷன் செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்த சாதனங்கள் இந்த மாற்று கொள்கையின் கீழ் வராது என்றும் நிறுவனம் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதற்கு பதிலாக, அது வழக்கமான பழுது செயல்முறை மூலம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பார்க்கும் போது, இயக்கருவி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படும். ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்கொண்டு இயங்கும் இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

கேன்வாஸ் செல்பீ 2

கேன்வாஸ் செல்பீ 2

மல்டி விண்டோ ஆதரவு, நோட்டிபிகேஷன் பேனலில் ரிப்ளை, புதிய க்விக் செட்டிங்ஸ் மற்றும் இதர தொகுக்கப்பட்ட அறிவிப்புகள் போன்ற அம்சங்களுடன் இந்த தொலைபேசி வருகிறது. பின்புற பேனலில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. எனினும், வலைத்தளம் கேன்வாஸ் செல்பீ 2 சாதனத்தின் திரை அளவு, விலை மற்றும் கிடைக்கும் தேதி ஆகிய விவரங்களை பற்றி குறிப்பிடவில்லை.

Best Mobiles in India

English summary
Micromax Canvas Selfie 2 with 8-megapixel front camera spotted on company website. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X