கேலக்ஸி எஸ்8-க்கு போட்டியாக களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி.!

|

இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஒரு புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்போகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி என பெயரிடப்பட்டுள்ளது என்று மைக்ரோமேக்ஸ் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளிவருமென்று நிறுவனம் வெளிப்படுத்துகிறது. மேலும் இது 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுருக்கும் என்றும் அறியப்படுகிறது. இது தவிர்த்து நிறுவனம் சாதனம் பற்றி அதிகம் எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இது போன்ற திரை விகிதத்தை கொண்டு வெளியாகும் முதல் மலிவு ஸ்மார்ட்போனாக இந்த கருவி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்8-க்கு போட்டியாக களமிறங்கும் கேன்வாஸ் இன்பினிட்டி.!

சமீபத்தில் கசிந்த புகைப்படும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி (இடதுபுறத்தில்) சில குறைந்தபட்ச பக்க பெஸல்களைக் கொண்டிருக்கும் மற்றும் குறைந்த மற்றும் உயர்ந்த தாழ்ந்த பெசல்கள் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. எனினும், சாம்சங் கேலக்ஸி எஸ்8 உடன் ஒப்பிடும்போது (வலதுபுறம்) இந்த ஸ்மார்ட்போன் சற்று உயரமாக இருக்கும் என்பதுபோல் தெரிகிறது.

மேலும் வெளியான இந்த படத்தில் வலதுபுறத்தில் வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் இருப்பதை எளிமையாக பார்க்க முடிகிறது. அதே சமயம் மைக்ரோஃபோன் உடன் மைக்ரோயூஎஸ்பி போர்ட் உள்ளதையும் காண முடிகிறது. இதன் மூலம் மைக்ரோமேக்ஸ், புதிய திரை அளவிலான ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிகழ்த்தும் முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.

சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், அடிப்படையில் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த தொலைபேசி சில நல்ல கேமரா உணர்கருவிகளுடன் தன்னை நிரப்பிக்கொண்டு சந்தைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Micromax Canvas Infinity with 18:9 aspect ratio coming soon, leaked picture out. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X