Home
Mobile

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ அறிமுகம்.!

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

மிகவும் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மேலும் இக்கருவி பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் முதலில் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ :

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ :

கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்;காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபிமெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax Canvas Infinity Pro launched with 5 7 inch 18 9 display and dual front cameras for Rs 13999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X