ரூ.9,499/- விலையில் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப்.!
இந்த கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அசத்தலான பாரத் 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. மேலும் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,999-ஆக உள்ளது.கேமராவை பொறுத்தமட்டில், பாரத் 5 ப்ரோ ஆனது பின்புறத்தில் 13எம்பி ஒற்றை கேமராவும், முன்னூலாக்கம் ஒரு 5 எம்பி 5செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே குறைந்த ஒளியிலும் படங்களை பதிவு செய்யஉதவும் எல்இடி ஃப்ளாஷ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இன்னொரு பெரும் குறை, கைரேகை சென்சார் இல்லாதது.

அறிமுகமாகியுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஆனது ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. நிறுவனத்தின்படி, ஒரு முழுமையான சார்ஜ் ஆனது இரண்டு நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுளை வழங்கும். தரவு பரிமாற்றத்திற்காகவும், ஸ்மார்ட்போன் சார்ஜ்ஜிற்காகவும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளது.
தற்சமயம் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போன் மாடல்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் 5.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவி 64-பிட் மீடியாடெக் எம்டி6737 எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி லைஃப் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9,499-என்று ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications