கேன்வாஸ் டூடில்2 ஐந்து அட்டகாசமான அம்சங்கள்!!!

|

மைக்கிரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பேப்லட் மாடல் போனான கேன்வாஸ் டூடில்2 ஆன்லைன் விற்பனையில் உள்ளது என்பதை முன்பே கூறியிருந்தோம். ஆன்லைன் ஸ்டோரான் ஸ்னாப்டீலில் இப்பொழுது இதன் விலை ரூ.19,990 ஆகும்.

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் டூடில் 2வின் வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்திய ஆன்லைன் ஸ்டோர் மார்கெட்டில் டூடில்2வை வெளியிடுவதற்க்கு மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் ஸ்னாப்டீலுடன் இணைந்திருக்கலாம் என தெரிகிறது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 5.7இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டுள்ளது. இதற்க்கு போட்டியாக 6.1இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டுள்ள ஹூவாய் அசென்ட் மேட்1 மற்றும் 5.8இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டுள்ள சாம்சங் கால்க்ஸி மெகா5.8 ஆகிய மொபைல்கள் கருதப்படுகின்றன.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2வின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.7இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே
720*1280 பிக்சல்ஸ் ரெசலூசன்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
12மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன்
2,600mAh பேட்டரி
டியுல் சிம்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2வின் ஐந்து அட்டகாசமான அம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

கேன்வாஸ் டூடில்2வின் அம்சங்களில் முக்கியமான ஒன்று இதன் 5.7இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் மக்கள் பெரிய ஸ்கிரீன் சைஸ் கொண்ட போன்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

ஒரு ஸ்மார்ட்போனின் வேகமான இயக்கத்திற்க்கு முக்கியமானது அதன் பிராசஸர். அந்த வகையில் கேன்வாஸ் டூடில்2 வேகமாக இயங்க 1.2GHZ கூவாட் கோர் பிராசஸரை கொண்டுள்ளது. மேலும் இதில் 1ஜிபி ராம், ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்க்கு பயன்படுகிறதோ இல்லையோ அதிகம் போட்டோ எடுக்க பயன்படுகின்றன. கேன்வாஸ் டூடில்2 12மெகாபிக்சல் கேமரா, 5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது.

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

ஸ்மார்ட்போன்களின் பெரிய பிரச்சனை பேட்டரிதான். இந்த பிரச்சனையை சமாளிக்கும் வகையில் கேன்வாஸ் டூடில்2 2,600mAh திறன் கொண்ட பெரிய சைஸ் பேட்டரியை கொண்டுள்ளது.

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2வின் இன்னுமொரு அம்சம் இதன் ஸ்டைலஸ். இது உங்களுக்கு போனை சிறப்பாக பயன்படுத்த உதவும்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X