மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 கலக்கல் விமர்சனங்கள்!!!

|

இந்திய மொபைல் நிறுவனமான மைக்கிரோமேக்ஸ் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற இந்திய நிறுவனங்களான கார்பான் மற்றும் ஸ்பைஸ் போன்றவைகளை காட்டிலும் மக்களிடத்தில் இது பிரபலமாக உள்ளது.

மைக்கிரோமேக்ஸின் ஸ்டைலிஸ் மொபைலான கேன்வாஸ் 4 இதனை மேலும் பிரபலமாக்கியுள்ளது. கேன்வாஸ் 4 பாடி பிளாஸ்டிக் மற்றும் மெட்டாலிக் பிரேம்களால் உருவானது. இதன் விலை ரூ.17,999 ஆகும்.

ரூ.20,000க்குள் ஒரு டீஸன்ட் குவாலிட்டி ஸ்மார்ட்போன், பல புதிய சிறப்பம்சங்கள், அதிக நேரம் வரக்கூடிய பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மைக்கிரோமேக்ஸ் வழங்கியுள்ளது.

நமது ஹிஸ்பாட் அணியினர் மைக்கிரோஸ் கேன்வாஸ் 4ரை பயன்படுத்தி அதில் உள்ள நிறைகள், குறைகள் மற்றும் சில விமர்சனங்களை நம்மிடையே பகிரிந்துள்ளனர். அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

பாக்ஸில்

மைக்கிரோமேகஸ் கேன்வாஸ் 4 A210 ஹேன்ட் செட்
யுஎஸ்பி சார்ஜர்
இயர்போன்
மேனுவல் இருக்கும்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4


மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ரை நமது ஹிஸ்பாட் அணியினர் கிட்டதிட்ட 15 நாட்கள் பயன்படுத்தியுள்ளனர். முதல் நாள் இதன் வேகம் எப்படி இருந்ததோ அதே வேகம் 15 நாட்களும் இருந்தது இதன் வைபிரேஷன் கூட அப்படியே இருந்தன.

கேன்வாஸ் 4 பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாடி கொண்டுள்ளது. இந்த போனின் முனைகள் சதுரமாக இல்லாமல் வளைவாக இருப்பது இதற்க்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4, 5 இன்ஞ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 1280*720 பிக்சல்ஸ் ஆகும். இதன் பிரன்ட் பேனலில் எல்ஈடி இன்டிகேட்டர், இயர் பீஸ் மற்றும் சென்ஸார் உள்ளது. இதன் மேல் பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் கீழ் பகுதியில் யுஎஸ்பி போர்ட் உள்ளது.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

மீடியாடெக்(MT6589) கூவாட் கோர் ARMv7 பிராசஸர் இதில் உள்ளது. தொழில்நுட்ப வல்லுனர்கள் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் பிராசஸரை பயன்படுத்துவதற்க்கு காரணம் அதன் சிறப்பான இயக்கம் தான்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

இதில் 1ஜிபி ராம் உள்ளது. இதன் திறனை நமது அணியினர் இதில் ஒரே நேரத்தில் 5,6 அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பார்த்தனர் அப்பொழுதும் இதன் இயக்கம் சிறப்பாகவே இருந்தது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 2ஜிபி ராம் கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மீடியாடெக் பிராசஸருக்கு 1ஜிபி ராம் போதுமானது தான். இதன் இயக்கமும் சிறப்பாகவே உள்ளது.


இதன் போன் மெமரி 2.46ஜிபி மற்றும் இன்டெர்னல் மெமரி 10.02ஜிபி ஆகும். இது 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி கொண்டுள்ளது. கேன்வாஸ் 4, 2000mAh Li-on பேட்டரி கொண்டுள்ளது. இது 14-17 மணி நேரம் டாக்டைம் திறன் கொண்டதாகும்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4 பென்ச்மார்க் ரிசல்ட்

AnTuTu: 12997
NenaMark 2: 46.5fps
Smartbench 2012:3551

Quadrant Score
Overall: 4043
CPU: 9047
Mem: 3365
I/O: 5051
2D: 262
3D: 2491

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுவிட்டது விரைவில் மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த புதிய ஓஎஸ் உடன் வரும் என எதிர்பார்க்கலாம்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ல் நிறைய அப்ளிகேஷன் சேவைகள் உள்ளன. M!செக்கியூரிட்டி, M!லைவ், M!ஜோன், கேம் ஹப் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன.

M!செக்கியூரிட்டி என்பது ஆன்டி-வைரஸ் அப்ளிகேஷன் ஆகும். M!லைவ், வீடியோ மற்றும் மியூசிக் போன்றவைகளை வாங்க உதவும் அப்ளிகேஷன் ஆகும். கேம் ஹப்பில் நீங்கள் பீரிமியம் கேம்களை வாங்கலாம். M!ஜோனில் லவ் டிப்ஸ், ஜோக்ஸ் போன்றவைகளை பெறலாம்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

இதில் நீங்கள் வீடியோ பார்க்கும் பொழுதே வேறு சில அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் இன்னொரு சிறப்பு அம்சம் பாப் அவுட் செகன்ட் வின்டோ. இதன் மூலம் ஒரு வின்டோவில் நீங்கள் மெயில்கள் அனுப்புவது அல்லது வேறு எதாவது வேலையை பார்த்துக்கொண்டு இன்னொரு வின்டோவில் வீடியோவை பார்க்கலாம்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

பாப் பிரௌஸர் இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம். இதில் நிறைய ஜெஸ்டர் அம்சங்கள் உள்ளது. கால் வரும் போது நீங்கள் மொபைலை காதின் அருகில் கொண்டு சென்றால் கால் அட்டென்ட் ஆகும். நீங்கள் போனை அன்லாக் செய்ய டிஸ்பிளேவில் ஊதினால் போதும்.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

கேமரா

இதில் 13 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் பிரன்ட் கேமரா ஆட்டோ போகஸ் மற்றும் எல்ஈடி பிளாஷ் உள்ளது. இந்த கேமரா வெளிபுறங்களில் போட்டோ எடுக்கும் பொழுது சிறப்பாக உள்ளது.

இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் உட்புறத்தில் போட்டோ எடுத்தால் அவ்வளவு சிறப்பாக இல்லை மற்றும் இதில் இருக்கும் கேமரா செட்டிங்ஸ் பெரும்பாலோனோருக்கு தெரிந்ததாக இல்லை. அதே போல் வெளிச்சம் கம்மியாக இருக்கும் போது போட்டோ எடுத்தால் சரியாக இருப்பதில்லை.

கேன்வாஸ் 4

கேன்வாஸ் 4

மைக்கிரோமேகஸ் கேன்வாஸ் 4ல் குறைகள் இருந்தாலும் நிறைகளே அதிகம் இருக்கின்றன.

நிறை

டிஸ்பிளே
டிஸைன்
இயக்கம்
ஜெஸ்டர் அம்சங்கள்

குறை

கேமரா
இயர்போன்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X