4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ அறிமுகம்.!
மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிஷன் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அந்தவகையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ எடிஷன் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பெய்ன் மற்றும் ஜெட் பிளாக் வண்ண விருப்பங்களில் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் கோ :
மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிஷன் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பாரத் கோ ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கூகுள் சார்ந்த செயலிகளை இயக்க மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


2000எம்ஏஎச்:
மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications