நோக்கியாவிற்கு போட்டி: முரட்டுத்தனமான பேட்டரியுடன் மைக்ரோமேக்ஸ் பாரத் 5.!
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.5,555-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 50ஜிபி இலவச தரவு வழங்குகிறது வோடபோன் நிறுவனம், மேலும் வோடபோன் புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது அந்நிறுவனம்.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 :
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு :
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 64ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
இந்த மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications