Home
Mobile

நேற்று அறிமுகமான ரெட்மீ 5-க்கு வெறும் ரூ.7999-ல் இன்றே ஆப்பு வைத்த இந்திய நிறுவனம்.!

வெறும் ரூ.7,999/- என்கிற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது நம்பமுடியாத அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக அதன் பேட்டரித்திறன் வேறொரு எல்லையை தொடுகிறது என்றே கூறலாம்.

By Muthuraj

பிரபல நோக்கியா மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்களின் மிட்-ரேன்ஜ் பிரிவு ஸ்மார்ட்போன்களின் பெரும்பாலான அறிமுகங்கள் முடிந்துவிட்ட நிலைப்பாட்டில், நீண்ட இடைவெளிக்கு பின்னர், இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அதன் பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.7,999/- என்கிற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது நம்பமுடியாத அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக அதன் பேட்டரித்திறன் வேறொரு எல்லையை தொடுகிறது என்றே கூறலாம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

அறிமுகமாகியுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஆனது ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. நிறுவனத்தின்படி, ஒரு முழுமையான சார்ஜ் ஆனது இரண்டு நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுளை வழங்கும். மற்றொரு சுவாரசியம் என்னவெனில் இந்த ஸ்மார்ட்போனின் காத்திருப்பு நேரம், சுமார் 21 நாட்கள் ஆகும்.

கருப்பு வண்ணம்.!

கருப்பு வண்ணம்.!

பாரத் 5 ப்ரோ ஆனது ஒற்றை நிற மாறுபாட்டில் மட்டுமே அதாவது கருப்பு வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கும். இதுவொரு சிறிய பின்னடைவாகும், ஏனெனில் மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளானது பல்வேறு வண்ண விருப்பங்களில் தங்கள் கருவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

5.2 அங்குல டிஸ்பிளே.!

5.2 அங்குல டிஸ்பிளே.!

ரூ.7,999/- என்கிற விலையை பார்த்த உடனேயே இக்கருவி நேற்று வெளியான சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் போட்டியாளர் என்பதை உணர முடிகிறது. அம்சங்களை ப்ரௌத்தமட்டில், மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஆனது, 1280 x 720 என்கிற பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி.!

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி.!

மேலும் இந்த தொலைபேசி 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது; சிப்செட் பற்றிய விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. எந்த சிப்செட் ஆக இருப்பினும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இணைக்கப்பட்டும்.

இரட்டை சிம், 4ஜி எல்டிஇ, வோல்ட்.!

இரட்டை சிம், 4ஜி எல்டிஇ, வோல்ட்.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கும் இக்கருவி, துரதிருஷ்டவசமாக ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டே இயங்குகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இரட்டை சிம், 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய விருப்பங்களை கொண்டுள்ளது

மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.!

மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.!

தரவு பரிமாற்றத்திற்காகவும், ஸ்மார்ட்போன் சார்ஜ்ஜிற்காகவும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளது. நேற்று தொடங்கிய ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் காத்திருப்பு நேரம் 17 நாட்கள் ஆகும்.பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் காத்திருப்பு நேரமானது 21 நாட்கள் ஆகும்.

பின்புறத்தில் 13எம்பி.!

பின்புறத்தில் 13எம்பி.!

கேமராவை பொறுத்தமட்டில், பாரத் 5 ப்ரோ ஆனது பின்புறத்தில் 13எம்பி ஒற்றை கேமராவும், முன்னூலாக்கம் ஒரு 5 எம்பி 5செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே குறைந்த ஒளியிலும் படங்களை பதிவு செய்யஉதவும் எல்இடி ஃப்ளாஷ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இன்னொரு பெரும் குறை, கைரேகை சென்சார் இல்லாதது. ஆம் மைக்ரோமேக்ஸ் ஆனது அதன் ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை சென்சரை அகற்றி பேஸ் லாக் அம்சத்தினை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஒருவழி செய்துவிடும்.!

ஒருவழி செய்துவிடும்.!

மொத்தத்தில், மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஆனது மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் உள்ள அத்துனை கருவிகளையும்,​​குறிப்பாக சியோமி ரெட்மீ 5, இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 மற்றும் டெனார் இ ஆகியவைகளை ஒருவழி செய்துவிடும். நேற்று வெளியான சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை பற்றி பேசுகையில், பிளாக், கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் லேக் ப்ளூ ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகியுள்ளது.

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.7999/-க்கு இந்திய சந்தையில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.8999/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும் இந்தியாவில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும்.

5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே.!

5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே.!

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது.

12எம்பி பின்புற கேமரா.!

12எம்பி பின்புற கேமரா.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

கைரேகை ஸ்கேனர் இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Micromax Bharat 5 Pro With Android Nougat and 5000mAh Battery Announced at Rs 7,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X