மைக்ரோமேக்ஸ் இந்தியாவின் பாரத் தொடரின் கீழ் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மைக்ரோமேக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் :
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 - 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஆண்ட்ராய்டு :
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ஆப் டிடிஆர்3 ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
8எம்பி ரியர் கேமரா:
இந்த மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, ரியர் கேமராவில் பனோரமா, டைம் லேப்ஸ், வாட்டர்மார்க், பியூட்டி மோட் போன்ற அம்சங்கள் உள்ளது. அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
5000எம்ஏஎச்:
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
விலை:
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.5,500-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.